தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில், 3 ஆண்டுகளில் 390 லாக்அப் படுகொலை!

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 390 லாக்அப் படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RS
RS

By

Published : Apr 6, 2022, 4:00 PM IST

புது டெல்லி : 2019ஆம் ஆண்டு ஏப்.1 முதல் 2022 மார்ச் 31ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் நாட்டில் 390 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் புதன்கிழமை (ஏப்.6) தெரிவித்தார்.

நாட்டிலேயே அதிகப்படியாக குஜராத்தில் 53 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (46), மத்தியப் பிரதேசம் (30) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தரவுகளின்படி இந்தத் தகவலை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

ஷஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய அவ்வப்போது வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

மேலும், NHRC வழிகாட்டுதல்களின்படி, காவலில் உள்ள ஒருவரின் மரணம் (காவல்துறை அல்லது நீதித்துறை), இயற்கையான அல்லது வேறுவிதமாக நடந்தால் என மரணம் நிகழ்ந்தால் இறப்பு நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் புகாரளிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது வழக்குத் தொடர மத்திய-மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது. தவறு செய்யும் அரசு ஊழியர் மீது தற்போதுள்ள விதிகள், நடைமுறைகளிபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கடந்தாண்டு சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் ஆகியோர் லாக்அப் மரணத்தில் உயிரிழந்தனர். நாட்டையை உலுக்கிய இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க : மகேந்திரன் மரண வழக்கு: விசாரணையை துரிதப்படுத்திய சிபிசிஐடி

ABOUT THE AUTHOR

...view details