மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தரமற்ற 37 மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை உத்ரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும்.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஆயிரத்து 244 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் ஆயிரத்து 207 மருந்துகளின் தரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, தொண்டை அலர்ஜிக்குப் பயன்படுத்தப்படும் 37 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது தெரியவந்தது.