தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பறிமுதல்செய்யப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான ஹெராயின்! - Rs 2,500 crores worth heroin seized in Delhi

டெல்லியில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான 354 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டு, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
டெல்லியில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

By

Published : Jul 10, 2021, 8:14 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு ஒன்று நேற்று (ஜூலை 9) ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான 354 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை கூறுகையில், இந்தப் போதைப்பொருள் கடத்தல் இதுவரை பிடிபட்ட மிகப்பெரிய கடத்தல்களில் ஒன்றாகும் என்றது.

"கடத்தலில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். காவல் துறையினருக்கு கிடைத்த சில ரகசிய தகவலின் அடிப்படையில்ஹெராயின் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்" எனச் சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரமோத் குஷ்வா தெரிவித்தார்.

டெல்லியில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

மேலும், "இந்தக் கடத்தல் கும்பல் டெல்லியில் எப்போதிலிருந்து போதைப்பொருள் சப்ளை செய்துவருகிறது என்பதை அறிய முயற்சிக்கிறோம். இது குறித்து தீவிரமாக அடுத்தகட்ட விசாரணை நடந்துவருகிறது" என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ரஜினி

ABOUT THE AUTHOR

...view details