மும்பை(மகாராஷ்டிரா): இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலேயே நீடித்து வருகிறது.
இதனிடையே, கறுப்பு, வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு அதிகளவில் பரவத்தொடங்கியது. இந்த வகைப் பூஞ்சைகள், மனிதர்களின் உடல் பாகங்களை அதிகளவில் பாதிக்கின்றன. இந்தப் பயத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், அடுத்ததாக 'பச்சை பூஞ்சை' எனும் நோய்த்தொற்று தலைதூக்கியுள்ளது.
முக்கியமாக இணைநோய்களான சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களேயே இந்தப் பூஞ்சை நோய் தாக்குகிறது.
பச்சை பூஞ்சை
நாட்டிலேயே முதன்முதலாக, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 34 வயதுடைய விஷால் என்பவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.