தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

33 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று - 33 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகா மாநிலத்தில், கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

33 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று
33 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று

By

Published : Dec 26, 2021, 7:29 AM IST

கோலார்: கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் என 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவர்களின் பரிசோதனை மாதிரிகளும் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பரிசோதனை செய்யப்பட்ட 1,160 பேரில் மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் உள்பட 233 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, புதிதாக 270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 31 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:Vaccination for children: ஜனவரி 3-ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details