தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: மத்திய சுகாதார அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்..! - covid positive in kerala precautions

Increase Covid in kerala: கேரளாவில் தற்போது கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்குமாறும், கண்காணிப்பை அதிகரிக்குமாறும் மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்
கேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 3:56 PM IST

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 300 புதிய கோவிட்-19 நோய்த் தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் இன்று (டிச.௨௧) தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் பதிவான 358 கோவிட் நோய்த்தொற்றுகளில் 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அந்த மாநிலத்தில் தற்போது உள்ள கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,341 ஆக உள்ளது என இணையதளம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது, புதிய மாறுபாடுகளுடன் கூடிய கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த சுகாதார நிபுணர் ஒருவர் நேற்று பேசுகையில்,“கோவிட் மற்ற தொற்று நோயைப் போன்றது, அதை முழுமையாக அழிக்க முடியாது. மேலும், நோயின் தாக்கும் விகிதமானது தற்போது குறைந்துள்ளது” என கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 211 ஆக உள்ளது. இந்நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 68,37,414 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கேரளாவில் கோவிட் வழக்குகள் அதிகரித்துள்ள போதிலும், வைரஸ் தொற்றுநோயைக் கையாள மருத்துவமனைகள் தயாராக இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா பாதிப்பு..!

இந்நிலையில் தற்போது, நோயின் தாக்கம் குறித்து டாக்டர் ஸ்ரீஜித் என் குமார் கூறுகையில், “கோவிட் என்பது மற்ற தொற்று நோயைப் போலவே முற்றிலும் அழிக்க முடியாத ஒன்று. இருப்பினும், நோயின் தாக்க விகிதமானது தற்போது குறைந்துள்ளது. மேலும் நோய்க்கு ஆளானவர்களின் இறப்பு விகிதம் முன்பு இருந்ததைப் போல அதிகமானதாக இல்லை. இந்த தொற்று தற்போது மற்ற காய்ச்சல் அல்லது ஜலதோஷத்தை போலவே உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கோவிட் பாதிப்பு நிலைமை மற்றும் சில மாநிலங்களில் கோவிட் பாதிப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவை தொடர்ந்து வரும் நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் நோய் குறித்த கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான பொதுச் சுகாதார அமைப்பின் தயார்நிலை குறித்து நேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அவர் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சென்ட்ரேட்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி ஒத்திகைகள் நடத்தப்படும். மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என உறுதியளித்தார். மேலும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளின் அவசியத்தை அவர் அந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிகரித்து வரும் புதியவகை கரோனா தொற்று.. உலக சுகாதார அமைப்பு எச்சரிப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details