தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் மூன்றில் ஒருவரிடம் போலி லைசென்ஸ்: ஆதங்கத்தில் போட்டுடைத்த கட்கரி - பாஸ்ட் டேக் சேவை நிதின் கட்கரி

நாட்டின் 30 விழுக்காடு ஓட்டுநர் உரிமம் போலியானவை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari
நிதின் கட்கரி

By

Published : Feb 15, 2021, 8:29 AM IST

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அரசு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது போக்குவரத்துத் துறையில் உள்ள குளறுபடிகள் பற்றி ஆதங்கத்துடன் பேசினார்.

அதில், "நாட்டின் 30 விழுக்காடு ஓட்டுநர் உரிமம் போலியானவை. மூன்றில் ஒருவர் கையூட்டுக் கொடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடுகின்றனர். அலுவலர்கள் இந்த மோசடிக்குத் துணைபோவது வெட்கக்கேடாகவுள்ளது.

நாட்டின் வாகன விபத்தை 2025ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. எனவே, சாலை புனரமைப்புக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த மோசடிகளைத் தவிர்க்கவே பாஸ்ட் டேக் சேவையை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது என கட்கரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மாநிலங்களுக்குத் தேசிய கண்ணோட்டம் இல்லை என்றால் நதியிணைப்பு வெறும் கானல்நீரே

ABOUT THE AUTHOR

...view details