கர்நாடகா மாநிலம் தாவணகெரேமாவட்டம் முழுவதும் போலி தங்க நாணயங்களைக் காட்டி பண மோசடி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. ஒரு கும்பல் தங்களிடம் புதையல் கிடைத்துள்ளதாக கூறி போலி தங்க நாணயங்களை மக்களிடம் விற்றுவருவதாக புகார்களும் எழுந்தன. குறிப்பாக கேரளாவில் ரூ.30 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து போலி தங்க நாணயங்களை வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
இதுகுறித்து தாவணகெரே காந்திநகர் போலீசார் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தகவல்களை பெற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் நேற்று(செப்.29) கைது செய்யப்பட்டார். அவரது பெயர் கிரிஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.