பீகார்: அவுரங்கபாத்தின் சாஹேப்கஞ்ச்சின் 24 வது வார்டில் உள்ள அனில் கோஸ்வாமி என்பவரது வீட்டில் இன்று (அக்-29) அதிகாலை சத் பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சத் பூஜைக்கான பிரசாதம் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவல்துறையினர் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.
தீ பிடித்தவுடன் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாக பரவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.