தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு! - மூன்று வயது சிறுவன் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 20 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் மூன்று வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

20 அடி போர்வெல்லில் தவறி விழுந்து மூன்று வயது சிறுவன் பலி
20 அடி போர்வெல்லில் தவறி விழுந்து மூன்று வயது சிறுவன் பலி

By

Published : Apr 28, 2021, 4:44 PM IST

Updated : Apr 28, 2021, 4:49 PM IST

உத்தரப் பிரதேசம்: ஹார்டோய் சதாத்தா பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தை ஷியாம்ஜீத் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 20 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்க முயன்றனர்.

பின்னர் அங்கு சென்ற மீட்புக்குழுவினர், அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை ஷியாம்ஜீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாமிரா என்ற தேவதை..!

Last Updated : Apr 28, 2021, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details