தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் சுத்தம்செய்யும் பணியின்போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு - 3 workers died during cleaning operation in maharashtra

மகாராஷ்டிரா: தானேவில் ரசாயன தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By

Published : Mar 27, 2021, 4:04 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. அங்குள்ள ரசாயன தொட்டிக்கு வண்ணம்தீட்ட மூன்று தொழிலாளர்களை ஒப்பந்ததாரர் ஒருவர் அழைத்தார்.

தொடர்ந்து வண்ணம் தீட்டும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களிடம் தொட்டியைச் சுத்தம்செய்யுமாறு ஒப்பந்ததாரர் கூறினார். அதன்படி ரசாயன தொட்டியைச் சுத்தம்செய்யும் பணியின்போது தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தொட்டியில் உயிரிழந்து கிடந்த மூன்று தொழிலாளர்களையும் சடலமாக மீட்டனர். தற்போது ஒப்பந்ததாரரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: எகிப்தில் நேருக்கு நேர் ரயில்கள் மோதல்: 32 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details