தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்சநீதிமன்றத்துக்கு மூன்று பெண் நீதிபதிகள் - கொலிஜியம் பரிந்துரை

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Supreme Court Collegium
Supreme Court Collegium

By

Published : Aug 18, 2021, 12:56 PM IST

Updated : Aug 18, 2021, 7:39 PM IST

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு தேர்வு செய்யும் 'கொலிஜியம்' அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பரிந்துரை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒன்பது நீதிபதிகள்

  1. நீதிபதி பிவி நாகரத்னா - கர்நாடக உயர் நீதிமன்றம்
  2. நீதிபதி பேலா திரிவேதி - குஜராத் உயர் நீதிமன்றம்
  3. நீதிபதி ஹிமா கோலி - தெலங்கானா உயர் நீதிமன்றம்
  4. நீதிபதி பிஎஸ் நரசிம்மா - உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
  5. நீதிபதி ஏ ஓகா - கர்நாடகா உயர் நீதிமன்றம்
  6. நீதிபதி விக்ரம் நாத் - குஜராத் உயர் நீதிமன்றம்
  7. நீதிபதி ஏகே மகேஸ்வரி - சிக்கிம் உயர் நீதிமன்றம்
  8. நீதிபதி சிடி ரவிகுமார் - கேரள உயர் நீதிமன்றம்
  9. நீதிபதி எம்எம் சுந்தரேஷ் - சென்னை உயர் நீதிமன்றம்

பரிந்துரையில் மூன்று பெண் நீதிபதிகள்

கொலிஜியத்தின் இந்த பரிந்துரையில் நீதிபதி பிவி நாகரத்னா (கர்நாடகா உயர் நீதிமன்றம்), நீதிபதி ஹிமா கோலி (தெலங்கானா உயர் நீதிமன்றம்), நீதிபதி பேலா தேவி (குஜராத் உயர் நீதிமன்றம்) ஆகிய மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

கொலிஜியம் பரிந்துரை பட்டியல்

இவர்களில் கர்நாடக உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி நாகரத்னா, உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வுசெய்யப்படும் பட்சத்தில், அவர் வரும் 2027 ஆம் ஆண்டு, நாட்டின் முதல் பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிபதி ரோஹின்டன் நரிமன் ஓய்வு பெற்ற நிலையில், உச்ச நீ்திமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25ஆகக் குறைந்துள்ளது. நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34ஆக உள்ள நிலையில், காலியாகவுள்ள ஒன்பது இடங்களுக்கு கொலிஜியம் தற்போது பரிந்துரை மேற்கொண்டுள்ளது.

ஐந்து பேர் கொண்ட கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுடன், யுயு லலித், எம் கான்வில்கர், நீதிபதி சந்திரசூட், நீதிபதி நாகேஷ்வர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பரிந்துரையில் உள்ள நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவர்.

இதையும் படிங்க:சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசி தரூர் விடுவிப்பு

Last Updated : Aug 18, 2021, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details