மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஏக்தா நகர் பகுதியில் மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர். அங்குள்ள கழிப்பிடங்கள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இம்மூவரும் சென்றுள்ளனர். துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மூவரும் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூச்சுத் திணறி மயங்கியுள்ளனர்.
கழிவு நீர் தொட்டியில் விழுந்து 3 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்
மும்பையில் கழிவுகள் சுத்தம் செய்த போது கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூவரையும் பரிசோதித்தப்பின் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது. மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும்போது துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்துவருகின்றன. இவற்றை தடுக்க அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும், இந்த மரணங்கள் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:பாஜக மாபெரும் வெற்றி: ''2024-ம் நமதே!" - குஷி மோடில் பிரதமர் மோடி