குஜராத் மாநிலம் அங்கலேஷ்வரில் உள்ள தனியார் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் அரங்கேரியுள்ளது. தனியார் வங்கி உள்ளே திடீரென துப்பக்கியுடன் வந்த சில கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளியடித்துவிட்டு, அங்கிருந்து பைக்கில் தப்பிச்செல்ல முயற்சித்தனர்.
அப்போது வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அவர்களை துரத்தினர், இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் துரத்தி சென்றனர், அப்பொழுது கொள்ளையர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது.