ஸ்ரீநகர்:தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராப்கம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று (ஜூன் 12) துப்பாக்கிச்சுடு நடந்தது. இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - குல்காம்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சுட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா என்கவுன்டர்
அதோடு மேலும் பல பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் தெரிவித்தனர். காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக, பயங்கரவாத நடவடிக்கைகள் நேர்ந்துவருகிறது. இதனால் நாள்தோறும் துப்பாக்சூடு நடத்தப்படுகிறது. முன்னதாக, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று (ஜூன் 11) சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலத் தகராறில் இளம்பெண் கொலை... 3 வீடுகள் எரிப்பு...