தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இருமல் மருந்து குடித்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு - டெல்லியில் குழந்தைகள் உயிரிழப்பு

டெல்லியில் இருமல் மருந்து குடித்த 3 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

die
die

By

Published : Dec 20, 2021, 4:05 PM IST

டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று 16 குழந்தைகள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிக்க அளிக்கப்பட்ட வந்த நிலையில் 3 குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து மருத்துவர்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகத்தில் இருந்து வாங்கப்பட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அந்த மருந்தை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் மருத்தால் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்து மயக்கம், தீவிர தூக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இதனை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கக் கூடாடு என்றும் மருந்தாளர்கள் தெரிவித்துள்னர்.

இதையும் படிங்க:வாந்தி, வயிற்றுப்போக்கால் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: காவல் துறையினர் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details