காஷ்மீரில் அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், நேற்றிரவு (ஜனவரி 19) பாகிஸ்தான் ராணுவம் திடீரென பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் உதவி... எல்லையில் மூவர் சுட்டுக்கொலை! - காஷ்மீர் தாக்குதல்
காஷ்மீர்: அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மூவர், இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்
கிடைத்த தகவலின்படி, இறந்த பயங்கரவாதிகளின் உடல்கள் பாகிஸ்தான் பக்கம் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தான் உள்ளது. இதுவரை, சடலங்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எடுக்கவில்லை. 2021ஆம் ஆண்டில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட முதல் பெரிய போர் நிறுத்த மீறல் இதுவாகும் எனக் கூறப்படுகிறது.