ஆக்ரா: மூன்று மாதங்கள், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள், உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்துள்ளனர்.
அக்டோபர் 24 முதல் 26ஆம் தேதிவரை உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம் மற்றும் தத்தெடுப்புக்கு முந்தைய மையத்தில் பிறந்து மூன்று குழந்தைகள், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் இறந்தனர். ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
எஸ்.என் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் வழியிலுள்ள மருத்துவமனையில் அக். 24ஆம் தேதி நான்கு மாத குழந்தையான சுனிதா இறந்துள்ளார். மூன்று மாத குழந்தை பிரபா மற்றும் இரண்டு மாத குழந்தை அவனி ஆகியோர் அக். 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்தனர்.
தற்போது, இரண்டு தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒவ்வொரு பிரிவிலும் 44 குழந்தைகளை எட்டு மணி நேரம் கவனித்துக்கொள்கிறார்கள்.
கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செப்டம்பர் மாதம் சிரோலி கிராம மையத்தில் ஒரு ஆய்வு நடத்தியிருந்தார். அந்த ஆய்வில் ஐந்து வயதிற்குள்பட்ட 13 குழந்தைகள் இருந்தனர் என்பது தெரியவந்தது.
மேலும், குழந்தைகளுக்கு முறையான கவனிப்பு மற்றும் ஊட்டச்சத்து இல்லாததைக் காரணம் காட்டி மாவட்ட நன்னடத்தை அலுவலருக்கு (டிபிஓ) கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இருப்பினும், அக். 24ஆம் தேதி தொடங்கிய இறப்புகளுக்கு, நகரத்தின் திடீர் வானிலை மாற்றம் மற்றும் குழந்தைகளின் முன்கூட்டிய பிறப்புகளே காரணம் என்று மையத்திலுள்ள கண்காணிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாவட்ட நீதவான் பிரபு என்.சிங் கூறியதாவது:
"இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, மைய நிர்வாகத்தால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அக்குழந்தைகள், பெற்றோரால் தூக்கி எறியப்பட்ட குழந்தைகள். மற்றொரு குழந்தை உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையின் போது இறந்தது".
தற்போது, 10 வயதிற்குள்பட்ட 44 குழந்தைகள் ஆக்ராவில் உள்ள மாநில அரசின் தங்குமிடம் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பிரிவுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக மையத்தில் ஆறு பெண்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 44 குழந்தைகளை கவனிக்க 2 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர்.
"மையத்தில் ஆய்வொன்றை நடத்த, நான் தலைமை மேம்பாட்டு அதிகாரி ஜே. ரீபாவிடம் கேட்டுள்ளேன். குழந்தைகளின் இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது சில மருத்துவ நிலைமைகளால் ஏற்பட்டதா என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். தங்கியுள்ள அனைத்து குழந்தைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு, மையத்தில், மாவட்ட நீதவான் பிரபு என்.சிங் கூறினார்.
செப். 19ஆம் தேதியிட்ட தனது கடிதத்தில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சர்வ்ஜீத் குமார் சிங் எழுதியிருந்ததாவது: “குழந்தைகளைப் பார்ப்பதன் மூலம், அவர்களுக்கு போதுமான அளவு பால் / சத்தான தூள் கிடைப்பதாகத் தெரியவில்லை. மேலும்,
"குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். லாக்டோஜென் தூள் (lactogen powder) மற்றும் உணவு கொள்முதல் பதிவேட்டைப் பற்றி கேட்டபோது, மையத்தில் எந்தவொரு பொறுப்பான பதில்கள் வழங்கவில்லை. குழந்தைகளுக்கு விதிமுறைகளின்படி, பால் மற்றும் சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. இது ஆட்சேபனைக்குரியது."
மேலும், "மையத்தில் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் ஏற்படாதவாறு விதிகளின்படி செயல்பட வேண்டும்" என்று மாவட்டத்தில் தங்குமிடம் வீடுகளை ஆய்வு செய்வதற்கான குழுவின் தலைவரான நீதிபதி டிபிஓவிடம் கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள் இல்லத்தின் கண்காணிப்பாளர் விகாஸ் குமார் தெரிவித்ததாவது:
"மூன்று குழந்தைகளும் முன்கூட்டியே பிறந்தன. வானிலை நிலைமைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. மையத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது" என்று மாநில அரசுக்கு சொந்தமான குழந்தைகள் இல்லத்தின் கண்காணிப்பாளர் விகாஸ் குமார் தெரிவித்தார்.