லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டம். சாம்ரௌடி பகுதியைச் சேரந்த காவலர் ஒருவர் குடும்பத்தினர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இது தொடர்பாக காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோடாரி, கம்பு, தடி போன்ற ஆயுதங்களைக் கொண்டு காவலர் ஒருவரின் குடும்பத்தினர் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் காவலரின் குடும்பத்திற்கும், அருகில் வசிப்பவரின் குடும்பத்திற்கும் உணவுக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாக விரோதம் இருந்து வந்துள்ளதும், அவை தொடர்ந்து அதிகரித்ததும் தெரியவந்துள்ளது.