கர்நாடகா (பெங்களூரு):விவசாய சங்கத்தலைவரும் BKU செய்தித் தொடர்பாளருமான ராகேஷ் திகாயித், இன்று (மே 30) பெங்களூரு காந்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் ஊடகங்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த விவசாயி தலைவர் ராகேஷ் டிகாயித்தின் மீது திடீரென தகராறில் ஈடுபட்டு, அவரது முகத்தில் கறுப்பு நிற மை ஊற்றப்பட்டது. அவர்களில் ஒருவர் 'மோடி, மோடி' என்று முழக்கம் எழுப்பியதை அடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். பின்னர், அங்கிருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் தப்பியோட முயன்றவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால், அவரது தலைப்பாகை, முகம், குர்தா மற்றும் கழுத்தில் பச்சை சால்வை ஆகியவற்றில் கறுப்பு மை பரவியது.
தனியார் சேனல் ஒன்றில் சமீபத்தில் ஒளிபரப்பிய 'ஸ்டிங் ஆபரேஷன்'-இல் மற்றொரு விவசாயி தலைவரான கொடிஹள்ளி சந்திரசேகர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு தீர்வு காண டெல்லியில் 13 மாதங்களாக நீடித்து வந்த விவசாயிகள் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர, பணத்தை வாங்கிக் கொண்டு மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்து, ராகேஷ் திகாயித் முயற்சிப்பதாக சந்திரசேகர் கூறியதாகக் கூறப்படுகிறது. போலீசார் 3 பேரையும் கைது செய்து ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கறுப்பு மை வீசப்பட்ட விவகாரத்தில் "இது பாஜகவின் சதி. நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கத்தவறியது" என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து திகாயித், செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு நேர்ந்த இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “கர்நாடகாவில் உடல் ரீதியான தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஸ்டிங் ஆபரேஷன் செய்த மீடியா சேனல் ஒன்று டிஆர்பியை அதிகரிக்கும் நோக்கில் ஆத்திரமூட்டும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் மேடைக்கு ஏறி வந்து மைக்கை கொண்டு தாக்கமுயற்சித்தார். அடிகளைத் தடுக்க என் கை தவறினால் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கும். என் கைகள் வீங்கிவிட்டன," என்று அவர் கூறினார்.