தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மே மாத மத்தியில் இரண்டாம் அலை உச்சம் தொடும் - இந்தியாவில் கோவிட்-19 பரவல்

மே 11-15 காலகட்டத்தில் கோவிட்-19 இரண்டாம் அலை உச்சம் தொடும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

Covid wave
Covid wave

By

Published : Apr 23, 2021, 7:52 PM IST

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் குறித்த கணிப்பை ஐஐடி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் இரண்டாம் அலையின் உச்சம் மே 11-15 தேதிகளில் காணப்படலாம்.

அப்போது, இந்தியாவில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தொட வாய்ப்புள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. அதேபோல் முதல் அலையின்போது மக்கள் ஒழுக்கம் கடைபிடித்த நிலையில் தற்போது அதை முறையாக கடைபிடிக்கவில்லை.

அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்த முடியாது என்பதால் மக்கள் கோவிட்-19 விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். இரண்டாம் அலை முழுமையாக அடங்க மூன்று மாதங்கள் பிடிக்கும் என ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்கு மேலும் ஒரு மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details