கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்காக அனைத்து இணைய சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் 2ஜி சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
அந்தச் சேவை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 18 மாவட்டங்களில் 2ஜி சேவை வருகிற நவம்பர் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.