டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய குற்ற ஆவண காப்பகமானது(NCRB) இந்திய தண்டனைச் சட்டத்தின்(IPC) கீழ் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக மட்டும் 3,71,503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மட்டும் 27,046 ஆகும். பாதிக்கப்பட்டவர்களில் 2,655 பேர் சிறுமிகள். அந்த வகையில், இந்தியாவில் நாளொன்றுக்கு 77 பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.