டெல்லி: பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் அமைக்க மத்திய அரசின் இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் உலகின் பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட உள்ளது.
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் இருந்து இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவரும், பேராசிரியருமான ஆச்சால் பாண்டியா தலைமையில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய வெண்கல நடராஜன் சிலை படெல்லி சென்றடைந்தது.
அங்கு இந்த சிலை ஆறு அடி உயர மேடையில் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை, தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீ.பி.கண்டன், மற்றும் தேவ.சுவாமிநாதன் சகோதரர்கள் மற்றும் சக ஸ்தபதிகளின் உதவியோடு சுமார் ஆறு மாத காலமாக இச்சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.