தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2021, 3:03 PM IST

Updated : May 18, 2021, 3:29 PM IST

ETV Bharat / bharat

நாடு முழுவதும் கோவிட் இரண்டாம் அலையில் 270 மருத்துவர்கள் பலி

கோவிட் இரண்டாம் அலை காரணமாக இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் பலி
மருத்துவர்கள் பலி

கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த இரண்டாம் அலையில் மருத்துவர்கள் பலரும் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கூட்டமைப்பு(ஐ.எம்.ஏ) தலைவரான டாக்டர் கே.கே. அகர்வால் இந்த பெருந்தொற்று காரணமாக நேற்று (மே 17) உயிரிழந்துள்ளார். இரண்டாம் அலை காரணமாக இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பிகாரில் 78 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 37 பேரும், டெல்லியில் 29 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். முதல் அலை காரணமாக 748 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.எம்.ஏ. புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இருப்பினும் முதல் அலையை விட இரண்டாம் அலை பாதிப்புதான் மோசமாக உள்ளதாக ஐ.எம்.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இரண்டாம் அலை தொடர்பாக மருத்துவர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை

Last Updated : May 18, 2021, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details