தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மும்பை மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன்  இருந்திட வேண்டும்' - ரத்தன் டாடா - மும்பை பயங்கரவாத தாக்குதல்

டெல்லி: 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரவாதத் தாக்குதலை மும்பை நகரம் எதிர்கொண்டதுபோல் இன்றும் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் மக்கள் இருந்திட வேண்டும் எனத் தொழிலதிபர் ரத்தன் டாடா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

By

Published : Nov 26, 2020, 6:17 PM IST

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரவாதத் தாக்குதலை யாரும் மறந்திட முடியாது. குறிப்பாக, அச்சமயத்தில் மும்பை மக்கள் ஒன்றிணைந்து, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்தை வென்றெடுத்தனர்.

இன்று, நாம் நிச்சயமாக உயிரிழந்தவர்கள் கண்டு வருத்தப்படுவோம். ஆனால், அவர்களின் தியாகத்தையும், தைரியத்தையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். தற்போதும், மும்பை மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் இருந்தால் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை மஹிந்திரா & மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details