தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியில் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் டிராக்டர் விபத்தில் 26 பேர் பலி ...! - டிராக்டர் விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கோயிலுக்குச் சென்று திரும்பி வரும் வழியில் டிராக்டர் விபத்துக்குள்ளாகி குளத்தில் விழுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர்.

உ.பியில் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் டிராக்டர் டிராலி விபத்தில் 26 பேர் பலி ...!
உ.பியில் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் டிராக்டர் டிராலி விபத்தில் 26 பேர் பலி ...!

By

Published : Oct 2, 2022, 8:28 AM IST

உத்தரப் பிரதேசம்(கான்பூர்):கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று(அக்.1) திரும்பி வந்த டிராக்டர் - டிராலி விபத்திற்குள்ளாகி குளத்தில் விழுந்தது. இந்நிலையில், அதில் பயணித்த 50 நபர்களில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உன்னாவிலுள்ள சந்திரிகா தேவி கோயிலுக்குச் சென்று திரும்பி வரும் வழியில் இத்துயர சம்பவம் நடந்தேறியது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கான்பூரில் நிகழ்ந்த டிராக்டர் டிராலி விபத்து மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் தங்களின் நெக்கமானவர்களை இழந்தவர் இடத்தே என் நினைவுகள் உள்ளன. சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு எனது பிராத்தனைகள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயப்பட்டவர்களுக்கும் தலா ரூ.50000 வழங்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு மகளாக நடிக்க வாய்ப்பு - மும்பை பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details