இரண்டு மணி நேரத்தில் ஆக்சிஜன் வராவிட்டால் 60 பேர் உயிர் கேள்விக்குறி! - சர் கங்கா ராம் மருத்துவமனை
09:03 April 23
டெல்லி: அடுத்த 2 மணி நேரத்திற்குள் ஆக்சிஜன் விநியோகம் கிடைக்காவிட்டால், 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என சர் கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், இன்னும் 2 மணி நேரம் மட்டுமே ஆக்சிஜன் கைவசம் உள்ளதால், அதன்பிறகு 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வென்டிலேட்டர்கள், பிபாப் கருவிகள் சீராக செயல்படவில்லை. எனவே, உடனடியாக ஆக்சிஜன் விநியோகம் செய்யுமாறு டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும், மருத்துவமனையின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 பேர் பலி