தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை - 25 மாணவர்கள் படுகாயம்

ஹரியானாவில் உள்ள ஜிவானந்த் பள்ளியில், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் உள்பட மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

25 children injured Gannaur  Jivanand School roof collapsed  Gannaur School Roof Collapsed  Gannaur Jivananda School  Jivanand School Chhat Giri Gannaur  25 Students Injured In School Roof Collapse  portion of school roof  Gannaur school  மேற்கோரை இடிந்து விழுந்த சம்பவம்  பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது  ஹரியானாவில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம்  இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை  மாணவர்கள்  மாணவர்கள் படுகாயம்
இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை

By

Published : Sep 23, 2021, 5:32 PM IST

ஹரியானா மாநிலம், கானூரிலுள்ள ஜிவானந்த் பள்ளியில், மழையால் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

இதனை பழுதுபார்க்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டுமானத்தில் இருந்த மேற்கூரையின் ஒரு பகுதியானது இன்று (செப்.23) இடிந்து விழுந்தது.

அப்போது அவ்விடத்தில் மாணவர்கள் இருந்ததனால், சுமார் 25 மாணவர்கள் உள்பட மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை கானூரில் உள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஐந்து மாணவர்கள் கவலைக்கிடம்

இவ்விபத்தில் சிக்கிய ஐந்து மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக காயமடைந்தவர்கள் கானூரில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஐந்து மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக கான்பூர் பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து கானூர் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் (Sub-Divisional Magistrate) கூறியதாவது, 'பள்ளியின் மேற்கூரை மழையால் சேதமடைந்துள்ளதால், அதனைப் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

இதில் பள்ளி நிர்வாகத்தின் தவறு என்னவென்றால், மாணவர்களை கட்டுமானப்பணிகள் நடக்கும் இடத்தில் அமர வைத்தது. இதற்காக அந்நிர்வாகத்தின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read:Headmaster goes for a massage from parent, gets suspension in Bengaluru

ABOUT THE AUTHOR

...view details