புவனேஸ்வர்: கடந்த இரு தினங்களில் ஒடிசாவில் 242 குழந்தைகள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் கடந்த இரு தினங்களாக குழந்தைகள் அதிகமாக கரோனா வைரஸினால் அதிகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவர்கள் 9 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆவார்கள்.
கடந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டுள்ள 242 குழந்தைகளில் 104 பேர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.15) பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஒடிசாவை போன்று பெங்களூருவிலும் கரோனா வைரஸிற்கு குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த 10 நாள்களில் ஆயிரம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.