தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 2,419 பேர் அஞ்சல் வாக்களிக்க நடவடிக்கை! - Pudhucherry news

புதுச்சேரி: அஞ்சல் வாக்களிப்பவர்களிடம் நாளைமுதல் (மார்ச் 25) வாக்குச் சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் அலுவலர் பூர்வா கார்க் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 2,419 பேர் தபால் வாக்களிக்க நடவடிக்கை
புதுச்சேரியில் 2,419 பேர் தபால் வாக்களிக்க நடவடிக்கை

By

Published : Mar 24, 2021, 10:17 PM IST

Updated : Mar 24, 2021, 10:25 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் அலுவலர் பூர்வா கார்க் இன்று (மார்ச் 24) ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது,

"புதுச்சேரியில் தேர்தல் நாளன்று பணி மற்றும் சில காரணங்களால் வாக்குச்சாவடிக்கு வந்து, வாக்களிக்க இயலாதோர் விவரங்களைத் தேர்தல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி 80 வயதுக்கு மேற்பட்டோர் 2,419 பேர் அஞ்சல் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவர்கள் - மாற்றுத்திறனாளிகள் 1,149 பேர், வீட்டில் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் 19 நபர்கள், கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 4 பேர், செய்தித் தொடர்பாளர்கள் 24 பேர் ஆகியோர் ஆவர்.

இவர்களிடம் நாளைமுதல் (மார்ச் 25) வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் அரசுப் பணியாற்றுபவர்கள் 9,200 பேருக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 24, 2021, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details