டெல்லி : நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது டெல்லி திகார் சிறைச்சாலையில் இருந்து சுமார் 6 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் 2 ஆயிரத்து 400 பேரை தற்போதுவரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சம்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 பிப்ரவரி-மார்ச் மாதத்தில், கரோனா பரவல் இரண்டாவது அலையின்போது, 5 ஆயிரம் கைதிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சரணடைவதற்கான நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 10 பேர் கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி பிரமுகர் முகம்மது சகாபூதீன் மற்றும் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் ஆகியோரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாடு முழுக்க சட்டென்று குறைந்த கரோனா பாதிப்பு!