தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் உயிரிழப்பு! - புதுச்சேரி கரோனா பாதிப்பு

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

24 person dead by corona
24 person dead by corona

By

Published : May 13, 2021, 1:47 PM IST

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 292 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில், ஆயிரத்து 550 நபர்கள், காரைக்காலில் 227 நபர்கள், ஏனாமில் 123 நபர்கள், மாஹேவில் 48 நபர்கள் என மொத்தம் ஆயிரத்து 942 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 16 ஆயிரத்து 568 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 912 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதுச்சேரி மாநிலத்தில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 78ஆயிரத்து 973 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

புதுச்சேரியில், இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 935 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details