தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யூ-ட்யூபில் இலவச கல்வி: டிஎஸ்பியிடம் கல்வி பயின்ற மாணவர்கள் 22 பேர் போட்டித் தேர்வில் வெற்றி! - ஜார்கண்ட் மாநில போட்டித் தேர்வு

ஜார்க்கண்ட் மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் ஜேபிஎஸ்சி (JPSC)தேர்வில் ராஞ்சி டிஎஸ்பியிடம் கல்வி பயின்ற மாணவர்கள் 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யூடியூப்பில் இலவச கல்வி
யூடியூப்பில் இலவச கல்வி

By

Published : Jun 1, 2022, 11:00 PM IST

ராஞ்சி (ஜார்கண்ட்): ஜார்க்கண்ட் மாநில காவல்துறையில் டிஎஸ்பியாக இருப்பவர், விகாஸ் சந்திர ஸ்ரீவஸ்தவா. இவர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலம் யூ-ட்யூப்பில் இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார். இதில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 'டிஎஸ்பி கி பாத்ஷாலா' என்ற பெயரில் உள்ள அவரது யூட்யூப் சேனலில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக வீடியோக்களை பார்த்து கற்றுக் கொள்ள முடியும் என்பதால் கிராமப்புற மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மாணவர்களும் கற்று வருகின்றனர்.

இந்தநிலையில், இதன் மூலம் கல்வி கற்க 22 மாணவர்கள் ஜேபிஎஸ்சி (JPSC - Jharkhand Public Service Commission) போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 2 மாணவர்கள் முதல் பத்து இடத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களின் வெற்றி குறித்து அறிந்த டிஎஸ்பி விகாஸ் சந்திர ஸ்ரீவஸ்தவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் பணியாற்றி வரும் விகாஸ் சந்திர ஸ்ரீவஸ்தவா, முன்னதாக தியோகாரில் வசிக்கும் போது, அங்கிருந்த அம்பேத்கர் நூலகத்தை கல்வியின் முக்கிய மையமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை - பிடிஆர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details