டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜன் அதிகமாகத் தேவைப்படும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், டெல்லி ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 23) ஆக்சிஜன் பற்றாக்குறையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்குப் போரடிவருகின்றனர்.