தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

21 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ வகை கரோனா பாதிப்பு! - டெல்டா பிளஸ் வகை கரோனா

மகாராஷ்டிரா: மும்பை, பால்கார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 21 பேரிடம் புதிய வகை டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

COVID
COVID

By

Published : Jun 22, 2021, 4:45 PM IST

Updated : Jun 22, 2021, 9:28 PM IST

2019ஆம் ஆண்டில் சீனாவில் கண்டறிப்பட்ட கரோனா வைரஸ், பல விதமாக உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவ தொடங்கியது. பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, ஆல்பா, பீட்டா என்று பெயர் சூட்டு வகைப்படுத்தப்படுகிறது.

இதில், இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பில் டெல்டா வகையைச் சார்ந்த சார்ஸ் - கரோனா வைரஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா இரண்டால் அலை பாதிப்பில் இந்த டெல்டா வகை வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கரோனா பரவல் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

டெல்டா பிள்ஸ் வைரஸ்

இந்நிலையில், இந்த டெல்டா வகை வைரஸ், டெல்டா பிள்ஸ் வைரஸாக தற்போது உருமாறி நாட்டின் சில மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின், மும்பை, பால்கார், சிந்து துர்க், தானே, ரத்னகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 பேருக்கு இந்த புதிய வகை டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு

மரபணு வரிசைப்படுத்துதலுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 வைரஸ் மாதிரிகளை சேகரிக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மே 15ஆம் தேதி முதல் 7,500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த 21 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரம் குறித்தும், பயண விவரங்கள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் முதன்முதலாக மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த 64 வயது பெண்மணி ஒருவரிடம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா 3.0: புதிய 'டெல்டா பிளஸ்' வகை கண்டுபிடிப்பு

Last Updated : Jun 22, 2021, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details