இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 2001 டிசம்பர் 13 அன்று பயங்கரவாதிகள் திடீரென காருடன் நுழைந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் எட்டு பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டப் பணியாளர் என ஒன்பது பேர் உயிர் நீத்தனர். இந்தியாவின் ஜனநாயகம் என்று கருதப்படும் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.