பாட்னா:பிகார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டம் தியாரா கிராமத்திலிருந்து 25 பேர் கந்தக் ஆற்றின் வழியாக தீன் தயால் காட் நோக்கி படகில் சென்றுள்ளனர். அப்போது, பலத்த நீர்சுழற்சி காரணமாக படகு நிலைதடுமாறி கவிந்தது.
இதில், ஐந்து பேர் நீந்தி கரை சேர்ந்தனர். நான்கு பெண்கள் உள்பட 20 பேர் ஆற்றில் மூழ்கி மாயமாகினர். இதுகுறித்து அருகிலுள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், காவலர்கள், மாநில பேரிடம் மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பிகார், நேபாளத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. பிகாரின் முக்கிய ஆறான கந்தக்கில் இயல்பை காட்டிலும் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது.
வெள்ளம் காரணமாக பல்வேறு கிராமங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் படகில் பயணிக்கின்றனர். இதனால், விபத்துகளும் ஏற்படுகின்றன. இதேபோல, கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிகார் - படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு