தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'20 மாத குழந்தையால் மறுவாழ்வு பெற்ற 5 பேர்' - இந்தியாவின் இளம் வயது நன்கொடையாளர்! - இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் குறைவு

டெல்லி: மூளை சாவு ஏற்பட்ட 20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் இளம் வயது உடலுறுப்பு நன்கொடையாளர் என்ற பெருமை தனிஷ்தா எனும் குழந்தைக்கு கிடைத்துள்ளது.

டெல்லி
டெல்லி

By

Published : Jan 14, 2021, 8:53 PM IST

டெல்லி ரோஹினி பகுதியில் வசித்துவரும் ஆஷிஷ் குமார் என்பவருக்கு, தனிஷ்தா என்கிற 20 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 8ஆம் தேதி, அந்தக் குழந்தை வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில், தவறி கீழே விழுந்துள்ளது. உடனடியாக, குழந்தையை அருகிலுள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இளம் வயது நன்கொடையாளர்

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவளுக்கு மூளை சாவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், மற்ற பாகங்கள் நல்ல செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, யாரும் எளிதில் நினைக்காத முடிவினை, அந்த கடினமான நேரத்தில் ஆஷிஷ் குமார் எடுக்க முற்பட்டார். குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் ஐந்து நபர்களுக்கு அவர்களது வாழ்க்கையை திருப்பி கொடுத்தது.

உடலை மண்ணில் புதைக்க விரும்பவில்லை

இதுகுறித்து பேசிய குழந்தையின் தந்தை ஆஷிஷ் குமார், "தனிஷ்தாவுக்கு மூளை சாவு ஏற்பட்டுவிட்டதாகவும், குணப்படுத்த முடியாது எனவும் மருத்துவர்கள் கூறினார்கள். இதைக் கேட்டு, ஒரு நிமிடம் எனக்கு உயிரே போய்விட்டது. உடலை மண்ணில் புதைப்பதை காட்டிலும் உறுப்புகள் தேவைப்படுவோரின் உடலில் பொறுத்தலாம் என முடிவு செய்தேன். இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்கையில், ஆம், நிச்சயமாக நீங்கள் அதை செய்ய முடியும் எனத் தெரிவித்தனர். தற்போது, அவளின் உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டு, மற்றவர்களின் வாயிலாக உயிருடன் இருக்கிறாள் என்ற ஆறுதலுடன் காலத்தை தள்ளுவோம்" எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் குறைவு

இதுகுறித்து பேசிய மருத்துவமனையின் தலைவர் (பிஓஎம்) டாக்டர் டி.எஸ்.ராணா, "குடும்பத்தின் இந்த உன்னத செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மற்றவர்கள் ஊக்குவிக்கும் வகையில் அமையும். உறுப்பு தானமானது இந்தியாவில் மிகவும் குறைந்த அளவில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து லட்சம் இந்தியர்கள் உறுப்புகள் இல்லாததால் இறக்கின்றனர். இதயம், கல்லீரல், சிறுநீரகம், கருவிழிப்படலம் முதலியவை குழந்தையிடமிருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன. அந்த உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details