தெலங்கானாவில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், இரண்டு நகைக் கடை வியாபாரிகள் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாஸ், ராம்பாபு. இவர்கள் நகைகடைகளும் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், இவ்விருவரும் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை, தெலங்கானாவில் உள்ள நகை கடைகளுக்கு விநியோகிக்க இரண்டு நண்பர்களுடன் காரில் பயணித்துள்ளனர். ராமகுண்டம் வழியாக பெல்லம்பள்ளி நோக்கிச் செல்கையில், அவர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், நால்வரும் காரில் சிக்கிக்கொண்டனர்.
கார் விபத்தில் சிதறிய 1 கோடி ரூபாய் நகைகள் அவ்வழியே வந்த மக்கள், இவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். இதில், ராம்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீனிவாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் சிதறிக்கிடந்த நகைகள் அடங்கிய பைகளைப் பத்திரமாகக் கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க:ரூ. 3 லட்சம் திருட்டு, மூதாட்டியிடம் 5 சவரன் நகைப் பறிப்பு - காவல் துறையினர் விசாரணை!