ஜம்மு நகரின் சுன்ஜவான் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புக் குழு அங்கு சென்று சோதனை நடத்தியது, ஜலால்லாபத் பகுதியை CRPF வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த திவீரவாதிகள் திடீரென சுடத் தொடங்கினர்.பாதுகாப்பு வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் இரண்டு வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மற்றொரு தாக்குதல்: இன்று காலை 4 மணி அளவில் பயங்கரவாதிகள் மற்றொரு தாக்குதலை நடத்தியுள்ளனர். 15 CISF(மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை) வீரர்கள் சென்ற வாகனத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இந்த தாக்குதலுக்கு CISF வீரர்கள் பதிலடி கொடுத்த நிலையில் தீவிரவாதிகள் பயந்து ஓடினர். பிரதமர் மோடி ஜம்மூ- காஷ்மீருக்கு வர இருக்கும் நிலையில் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.