ஹைதராபாத்: தெலங்கானாவில் சரண் அடைந்த 2 மாவோயிஸ்டுகள் மீதும் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தெலங்கானா மாநிலம் பத்ரகிரி கோதகுடம் மாவட்டத்தில் 21 வயதான இரு மாவோயிஸ்டுகள் போலீசில் சரணடைந்தனர். இந்த இருவரில் ஒருவர் பெண் ஆவார்.
தெலங்கானாவில் 2 மாவோயிஸ்டுகள் சரண்! - தெலங்கானா
தெலங்கானாவில் 2 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர்.
Maoists
இவர்கள் மீது 2019ஆம் ஆண்டு கொரில்லா வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கு உள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு செர்லாவில் நடந்தப்பட்ட தாக்குதலில் தொடர்பும் உள்ளது. இவர்கள் இருவரும் தெலங்கானாவின் அண்டை மாநிலமான சத்தீஸ்கரின் காடுகளில் பதுங்கியிருந்து மாவோயிஸ்டுகளாக செயல்பட்டுவந்துள்ளனர்.
இதையும் படிங்க : காட்டு யானைக்கு தீ வைப்பு!