தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேதியியல் தொழிற்சாலை தீ விபத்து: இருவர் உயிரிழப்பு - ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி

மும்பையில் உள்ள வேதியியல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 killed, 6 injured in explosion at chemical factory in Maha
2 killed, 6 injured in explosion at chemical factory in Maha

By

Published : Nov 5, 2020, 12:27 PM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள ரைகாத் மாவட்டத்தின் கோபலி நகரில் செயல்பட்டுவரும் வேதியியல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பா நகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தொழிற்சாலையில் வேதியியல் பொருள்கள் அதிகளவு இருந்ததன் காரணமாக தீ மளமளவென அதிகரித்தது.

இதன்காரணமாக, தீ விபத்தில் சிக்கி பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவலறிந்த தொழிற்சாலையின் தீ விபத்துத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். பின்னர், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

விபத்தில் சிக்கிய ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: 25 லட்சம் ரூபாய் பொருள்கள் எரிந்து சேதம்!

ABOUT THE AUTHOR

...view details