உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஹயாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் சுவர் நேற்றிரவு (நவ. 02) எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட இருவர் உயிரிழப்பு! - சம்பல் மாவட்ட செய்திகள்
லக்னோ: சம்பல் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
house collapses
இது தொடர்பாக ஹயாத் நகர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நயீம் ஜஹான் (36), மோனிஷ் (5) ஆகியோர் உயிரிழந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சுவர் இடிந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு: 3 நாள்களுக்குப் பின் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு