ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா பகுதியில் இருந்து வடகிழக்கே 62 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் நேற்றிரவு 11:04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து, 11:52 மணியளவில் கத்ராவில் இருந்து கிழக்கே 60 கிமீ தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்முவில் 1 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் - 2 earthquakes hit Jammu
ஜம்மு காஷ்மீரில் 1 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. உயிர் சேதமோ, பொருள் சேதமோ பதிவாகவில்லை.
ஜம்முவில் 1 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்
இந்த இரண்டு நிலநடுக்கங்களால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு ஜம்மு காஷ்மீரின் கத்ரா, தோடா, உதம்பூர், கிஷ்த்வார் மாவட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்... உ.பி. இளைஞர் அசத்தல்...