உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளனர். உலகளவில் நேற்றைய (டிச. 04) நிலவரப்படி 6.5 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் உலகளவில் கரோனா வைரஸ் தொற்றல் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. நேற்று (டிச. 04) ஒரேநாளில் அமெரிக்காவில் 2.35 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி நாட்டில் 2.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95 லட்சத்து 71 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக அளவிலான கரோனா பாதிப்பு நிலவரம்