தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலில், குவைட்டிலிருந்து இந்தியாவுக்குவந்த ஷேக் மஸ்தான் என்பவர் 160 கிராம் தங்க பிஸ்கட்களை கடத்திவந்தது சோதனையின்போது தெரியவந்தது.
லைஃப் ஜாக்கெட்டில் மறைத்து வைத்து 2.3 கிலோ தங்கம் கடத்தல் - 2.3 kg gold biscuits unearthed
ஹைதராபாத்: ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் லைஃப் ஜாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 2.3 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
தங்கம்
இதுகுறித்து விமான அலுவலர் ஒருவர் கூறுகையில், "உடலில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுங்க துறையின் விமான புலனாய்வு பிரிவு பறிமுதல் செய்தது" என்றார்.
தொடர்ந்து, துபாயிலிருந்து வந்தவரிடம் சோதனை நடத்தியதில் லைஃப் ஜாக்கெட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்திவந்தவர்களை கைது செய்து, தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.