உத்தரபிரதேசம்:பாரபங்கி மாவட்டம் ஃபதேபூர் பகுதி, சத்தி பஜாரில் உள்ள 3 மாடி குடியிருப்பு கட்டடம் திங்கட்கிழமை காலை (செப்.4) இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்த நிலையில் 2 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலையில் 3 மாடி கட்டடம் இடிந்து விழந்ததில் பலர் இடுபாடுகளில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து பாரபங்கி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், தேசிய மற்றும் மாநில மீட்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுளனர்.
இது வரை 2 நபர்கள் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ஃபதேபூர் பகுதியில் வசிக்கும் ரோஷினி பானோ (22) மற்றும் ஹகிமுத்தின் (28) என போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு (KGMU) சிகிச்சைகாக அனுப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:Palladam family murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா? பின்னணி என்ன?
இந்நிலையில், விபத்து குறித்துபாரபங்கி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில் , "இச்சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. அதிகாலை என்பதால் வெளிச்சம் இல்லாமல் மீட்கும் பணி சிரமத்திற்குள்ளானது. இதுவரை 12 நபர்களை மீட்டுள்ளோம். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இன்னும் 4 நபர்கள் இடுபாடுகளில் சிக்கி உள்ளனர் மற்றும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். பின்னர், முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் , "உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவாக குணமடைய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 40 வருட பழமையான இரண்டு மாடி கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள ஸ்லாப் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 மாத குழந்தை மற்றும் 2 நபர்கள் உயிரிழந்தனர். 5 நபர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!