ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் திரிகுட் மலைப்பகுதியில் நேற்று (ஏப். 10) 1,286 அடி உயரத்தில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். 19 கேபிள் கார்களில் 48 பேர் அந்தரத்தில் சிக்கினர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி 22 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.
இதனிடையே கேபிள் கார்களில் மாட்டியிருந்த நான்கு பேர் குதித்து தப்பிக்க முயன்றனர். அவர்களுக்கும் படுகாயாம் ஏற்பட்டது. இதுகுறித்து, துணை காவல் ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள், மீட்ப்புக்குழுவினர் உதவியுடன் சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுவருகின்றனர். இதுவரை 22 பேர் மீட்கப்பட்டனர். 26 பேரை மீட்கும் பணி நடந்துவருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்" என்றார்.