ஆலப்புலா: கேரளா மாநிலம் சென்னிதலா அருகே அச்சன்கோவில் ஆற்றில் 'பள்ளியோடம்' என்ற பாம்புப் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணி நடந்துவருகிறது. உயிரிழந்தவர்கள் ஆதித்தன் (17) மற்றும் வினீஷ் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரண்முலா ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அருகே பம்பை ஆற்றில் இன்று (செப்-11) நடைபெறவிருந்த படகுப் போட்டியில் கலந்துகொள்ள பள்ளியோடம் என்ற படகில் 60 பேர் பயணம் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு - படகில் சுமார் 60 பேர் பயணம் செய்தனர்
கேரளாவில் பாம்புப்படகு ஒன்று கவிழ்ந்ததில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்
Etv Bharatகேரளாவில் பாம்புபடகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
பெரும்பாலான துடுப்பு வீரர்கள் நீந்திப் பாதுகாப்பாக கரைக்குச் சென்றனர். மூன்று பேர் ஆற்றில் மூழ்கினர். அவர்களில் 2 பேரின் உடல் மீட்டக்கப்பட்டது. பொதுவாக ஒரு பாம்பு படகில் 50 துடுப்பு வீரர்கள் இருக்க வேண்டும். இந்த படகில் கூடுதலாக 10 பேர் ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆற்றை நீந்திக் கடந்து போய் தேர்வெழுதிய மாணவி...!